Enable Javscript for better performance
விடுதி சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் காலியாக உள்ள 8 ஆண் சமையலர் பணியிடங்கள் மற்றும் 17 பெண் சமையலர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    இப்பணியிடத்திற்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள், சைவ, அசைவ உணவு சமைக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 18-35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18-32 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 18-30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.    
    விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரம், வேலைவாய்ப்பு பதிவு விவரம் உள்ளிட்டவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மார்ச் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். 2015 ஆம் ஆண்டு சமையலர் பணியிடங்களுக்கு நேரடி நியமன முறைக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai