Enable Javscript for better performance
ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டு நேர்காணலுக்காக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான அலுவலக நாள்களில் கருவூல அலுவலகத்தில் நேரிலோ அல்லது வாழ்வு சான்று பெற்று அஞ்சல் மூலமாகவோ பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கருவூல அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அனைவரும் வருடாந்திர நேர்காணலுக்காக 2017, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையிலான காலவரையறைக்குள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்கு நேரில் வர வேண்டும்.
    இதுவரை ஆதார் அட்டை, வருமானவரி கணக்கு எண், குடும்ப அட்டை நகல் சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள் ஆவணங்களின் நகல்களுடன், தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
    மேலும், ஓய்வூதிய புத்தகம், நடைமுறையிலுள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும்.நேரில் வர இயலாதவர்கள், ஜீவன் பிரமான் வாழ்வு சான்று திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்குச் செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்ய நிகழாண்டு முதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    மேலும், ஓய்வூதியப் புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமானவரி கணக்கு எண், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் வாழ்வு சான்றை ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். வாழ்வு சான்று படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
    வாழ்வு சான்று படிவத்தை வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்களில் யாராவது ஒருவரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
    வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் வெளிநாட்டிலுள்ள நீதிபதி, நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச்சான்று பெற்று அனுப்ப வேண்டும்.
    மேலும், தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.
    நேர்காணலுக்கு வரத் தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுரிமைச் சான்றை அனுப்பத் தவறினோலோ ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் 2017, ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai