Enable Javscript for better performance
தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சேதம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.
    குன்னம் அருகேயுள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் கோபால் (52) விவசாயி. இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் அவரது குடிசை வீட்டில் படுத்து தூங்கிகொண்டிருந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, அருகில் இருந்த கோபாலின் தந்தை மாரிமுத்து வீட்டிற்கும் தீ பரவியது. இதையறிந்த அவரது குடும்பத்தில் உள்ள நபர்கள் வெளியே வந்துவிட்டனராம். தகவலறிந்த வேப்பூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
    இந்த தீ விபத்தில், மேற்கண்ட 2 குடிசை வீடுகளிலும் இருந்த ரொக்கம், நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் என சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோபால் அளித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai