Enable Javscript for better performance
தேர்தல் வெற்றி : பாஜகவினர் மோட்டார் சைக்கிள் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்பட 4 மாநிலங்களில் ஆட்சி அமைத்ததை கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணிக்கு, மாவட்ட இளைஞரணி தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
    மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தார். பாலக்கரை, சங்குப்பேட்டை, கடைவீதி, கனரா வங்கி சாலை வழியாக சென்ற பேரணி, பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொது செயலர்கள் பாஸ்கரன், அடைக்கலராஜ், இளங்கோவன், மாவட்ட செயலர்கள் குரு. ராஜேஸ், ராஜாராம், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், துணைத் தலைவர் வாசுதேவன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலர் முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய நிர்வாகி கலைச்செல்வன், நகரத் தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai