Enable Javscript for better performance
பெண் தற்கொலை: காதலன் உள்பட 2 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் உள்பட 2 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
    பெரம்பலூர் அருகேயுள்ள, குரும்பலுôர் புதுக்காலனியை சேர்ந்த தங்கவேல் மகள் ஐஸ்வர்யா (20). இவர், குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமிக்கு சொந்தமான விவசாய கிணற்றில், கடந்த 16 ஆம் தேதி இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலுர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
    இந்நிலையில், ஐஸ்வர்யாவின் சாவுக்கு காரணமான அவரது காதலன் நாவலுôர் கிராமத்தை சேர்ந்த பார்த்தீபன், அவரது நண்பர் சரண்ராஜ் ஆகியோரை
    கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி, ஐஸ்வர்யாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சிலர் அரசு தலைமை மருத்துவமனை, காமராஜர் வளைவு ஆகிய பகுதியில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், சடலத்தை வாங்க மறுத்து மருத்துவமனையில் ஐஸ்வார்யாவின் பெற்றோர் சனிக்கிழமை அதிகாலை வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதேபோல, வெள்ளிக்கிழமை மாலை காமராஜர் வளைவில் சாலை மறியலில் ஈடுபட்டு, போலீஸாரால் கைது செய்யப்பட்டு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்களும் சனிக்கிழமை அதிகாலை வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதைத்தொடர்ந்து, தற்கொலைக்கு தூண்டியதாக பார்த்தீபன், அவரது நண்பர் சரண்ராஜ் ஆகியோர் மீது சனிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனை செய்த ஐஸ்வர்யாவின் சடலத்தை, அவரது பெற்றோரிடம் பெரம்பலுôர் போலீஸார் சனிக்கிழமை மாலை ஒப்படைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai