Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட விஜயகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த மருதமுத்து மகன் அசோக் (50). இவர், சனிக்கிழமை இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரில் இருந்து விஜயகோபாலபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். சிறுவாச்சூர் துணை மின் நிலையம் அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அசோக் பலத்த காயமடைந்தார்.
    தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai