Enable Javscript for better performance
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், கோடைகால தண்ணீர் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை அருகே, மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோடைகால தண்ணீர்பந்தல் திறப்பு விழாவிற்கு, மாவட்ட செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
    சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ம. சந்திரகாசி, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், கட்சியின் அமைப்பு செயலர் அ. அருணாசலம் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
    இந்நிகழ்ச்சியில், நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றிய செயலர்கள் என்.கே. கர்ணன், சிவப்பிரகாசம், மாவட்ட நிர்வாகிகள் செல்வக்குமார், மா. வீரபாண்டியன்,
    முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.என். ராஜா, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் து. ஜெயக்குமார்,
    குரும்பலூர் பேரூர் செயலர் வி. செல்வராஜ், நிர்வாகி சங்கு கா. சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai