Enable Javscript for better performance
எழுத்தறிவு தேர்வு: 284 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 284 பேர் பங்கேற்றனர்.
    மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள், 15 வயது முதல் 80 வயதுக்குள்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். இத்தேர்வு, பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 120 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
    இதில், கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காதவர்கள் என 284 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.இத்தேர்வு மையத்தை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க. முனுசாமி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai