Enable Javscript for better performance
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சட்ட ஆலோசகர் ப. காமராசு தலைமை வகித்தார். மாவட்ட செயலர் எம். கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலர் எஸ்.பி.டி. ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் எம். சின்னதுரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், உயர்கல்வி நிலையங்கள் மதவெறி கூடாரங்களாக மாறிவருவதை தடுக்க வேண்டும். டெல்லியில் ஜே.என்.யூ. தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் சாவில் மர்மம் உள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிலையங்களில் சாதி பாகுபாடுகளைக் களைய ரோகித் வெமூலா சட்டம் இயற்ற வேண்டும்.
    கோவை ஈஷா மையத்தில் சட்ட விரோத நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அரியலூர் சிறுமி நந்தினி பாலியல் படுகொலையை சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
    குரும்பலூர் மாணவி சாவிற்கு காரணமாணவர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மக்கள் மருத்துவக் கழக மாநில செயலர் டாக்டர் சி. கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க மாவட்ட செயலர் என். செல்லதுரை, மாவட்ட செயலர்கள் சி. தமிழ்மாணிக்கம் (விசிக), செ. துரைராஜ் (மதிமுக), வீ. ஞானசேகரன் (சிபிஐ), மாதர் சங்க மாவட்டச் செயலர் எ. கலையரசி, முன்னாள் எம்எல்ஏ எம். தேவராஜன், வழக்குரைஞர் இரா. ஸ்டாலின், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai