பெரம்பலூரில் ரத்த தான முகாம்
By DIN | Published on : 20th March 2017 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நகர திமுக சார்பில், செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, மாவட்ட செயலர் சி. இராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலர் எம். பிரபாகரன் முன்னிலை வகித்தார். முகாமை, முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் கொள்கை பரப்பு செயலருமான ஆ. ராசா தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து 200 யூனிட் ரத்தம் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு. அட்சயகோபால், என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி. முகுந்தன், ரா. பட்டுச்செல்வி, வி. வெள்ளைச்சாமி, சி. சிவக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன், மாவட்ட பொருளாளர் செ. ரவிச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எஸ். அண்ணாதுரை, எஸ். நல்லத்தம்பி, டி. மதியழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.