Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான நேர்காணல்:45 நபர்களுக்கு பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    108 ஆம்புலன்ஸ் சேவைக்கான நேர்காணல்:45 நபர்களுக்கு பணி நியமன ஆணை

    By DIN  |   Published on : 20th March 2017 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்காணலில் 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
    தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ நிறுவனத்துடன் அவசர கால சேவைகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மேற்கண்ட நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.இந்த முகாமில் ஓட்டுநர், அடிப்படை மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்காணலில் 133 நபர்கள் பங்கேற்றனர். இதில், ஓட்டுநர் பணிகளுக்கு 30 பேரும், அடிப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு 15 பேரும் என 45 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மனிதவளத் துறை ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், மண்டல ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai