Enable Javscript for better performance
ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு  நாளை விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு  நாளை விளையாட்டுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 21st March 2017 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற உள்ளது.
    இதுகுறித்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2016 - 17 ஆம் ஆண்டுக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற உள்ளது.
    இதில், குழு விளையாட்டுப் போட்டிகளில் கோ - கோ, கபடி, கையுந்து பந்து, வளையப் பந்து, எறி பந்து, இறகுப் பந்து, கால் பந்து ஆகிய போட்டிகளும், 100 மீ, 200 மீ, 400 மீ ஆகிய ஓட்டப் பந்தயமும், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 400 மீ தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதிற்குள்பட்ட பிரிவில் இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai