Enable Javscript for better performance
"இளம்பெண் சாவில் உண்மை  நிலையை கண்டறிய வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே இளம்பெண் மரணத்தில் உள்ள உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.
    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்று, குரும்பலூரில் அண்மையில் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஐஸ்வர்யாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் மேலும் கூறியது:     பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் இறந்து கிடந்த ஐஸ்வர்யாவும், அவரது காதலன் பார்த்தீபனும் வெவ்வேறு சமூகத்தைத் சேர்ந்தவர்கள். ஐஸ்வர்யாவின் உயிரிழப்புக்கு அவரது நண்பர் ராஜவேல் மகன் சரண்ராஜ் காரணமாக இருந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
       அதேபோல, ஐஸ்வர்யாவின் பெற்றோரிடமும் காவல் துறையினர் விசாரணையும் மேற்கொள்ளவில்லை. தற்போது, இவ்வழக்கில் பார்த்தீபன் அவரது நண்பர் சரண்ராஜ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் மரணத்தில் உண்மை நிலையைக் கண்டறிய, தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.  
    மாநிலக் குழு உறுப்பினர் எம். சின்னதுரை, மாவட்ட செயலர் ஆர். மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். செல்லதுரை, ஆர். அழகர்சாமி, எ. கலையரசி, பி. ரமேஷ், வட்ட செயலர் எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.   

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai