Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

    By DIN  |   Published on : 21st March 2017 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய காத்திருப்பு போராட்டத்தில் அச்சங்கத்தைத் சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர்.  அரியலூரில் ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.  உதவி இயக்குநர், இணை இயக்குநர் கூடுதல் இயக்குநர் காலிப் பணியிடங்களை பதவி உயர்வு வழி உடனே நிரப்ப வேண்டும். கணினி இயக்குநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஒன்றியங்களில் தனி ஊழியர் கட்டமைப்பு உருவாக்க வேண்டும். கணினி இயக்குநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் அளவீட்டிற்கான தொழில்நுட்ப மதிபீடு ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு பணிவிதி திருத்தத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
    சாலை ஆய்வாளர்களுக்கு பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கில் கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம், கவன ஈர்ப்பு பேரணி, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
    இதையடுத்து, திங்கள்கிழமை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவெடுக்கப்பட்டது.
    அதன்படி, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலர்கள் வரையிலான பதவியில் உள்ளவர்கள் மாவட்டத் தலைவர் இ. மரியதாஸ் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
    இதில், அச்சங்கத்தைத் சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர்.  
    கடந்த ஒரு வாரமாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அலுவலகப் பணிகள், ஊரக மேம்பாடு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.   

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai