Enable Javscript for better performance
பல்திறன் போட்டி: ரோவர் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    பல்திறன் போட்டிகளில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
    தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. இதில், மேலாண்மைத் துறைத் தொடர்பான ஆளுமைத்திறன், விளம்பர யுக்தி, மேலாண் கலைச் சொற்கள் உருவாக்கம், மெளன நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
    இப்போட்டியில், பெரம்பலூர் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2 ஆம் ஆண்டு வணிக மேலாண்மையியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் பி. தமிழ்ச்செல்வன்,கே.சின்னராசு,கே.பாரதி,பி.பாரதி,டி.பஞ்சமூர்த்தி, கே.தினேஷ் ஆகியோர் மெளன நாடகத்தில் முதல்பரிசு பெற்றனர்.  மாணவர்களை, ரோவர் கல்வி குழுமங்களின் மேலாண் தலைவர் கி. வரதராஜன், ஆகியோர் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai