கிணறு வெட்டும் தொழிலாளி பாறை சரிந்து விழுந்து சாவு
By DIN | Published on : 22nd March 2017 07:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரம்பலூர் அருகே பாறை சரிந்து விழுந்து, கிணறு வெட்டும் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வடமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமந்தன் மகன் பழனிசாமி (35), கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் பெரம்பலூர் அருகேயுள்ள மேலப்பூலியூர் கிராமத்தில் தங்கி, நாவலூர் கிராமத்தில் உள்ள வீரனுக்குச் சொந்தமான விவசாயக் கிணறை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில், பழனிசாமி, அவரது மனைவி செல்வி, மேற்பார்வையாளர் தாசன் மற்றும் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கிணறு ஆழப்படுத்தும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தபோது, கிணற்றுக்குள் இருந்த பழனிசாமி கம்பரஷர் மூலம் துளையிட்டபோது கிணற்றின் மேல் பகுதியிலிருந்து பாறை சரிந்து விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த பழனிசாமி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். புகாரின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.