Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 168 சத்துணவு ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.
    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவர் டி. செல்லப்பிள்ளை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.எஸ். பெரியசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே. ஆளவந்தார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
    ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக அறிவித்து, அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதந்திர ஓய்வூதியமாக ரூ. 3,500 வழங்க வேண்டும்.
    உணவு செலவு மானியம் உணவு ஒன்றுக்கு ரூ. 5 வீதம் வழங்க வேண்டும். உதவியாளருக்கு சமையலர் பதவி உயர்வும், சமையலர் உதவியாளர்களுக்கும், பள்ளி இறுதி வகுப்பு முடித்தவர்களுக்கும் நிபந்தனையின்றி அமைப்பாளர் பதவி உயர்வும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கரைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 152 பெண்கள் உள்ளிட்ட 168 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.  
    அரியலூரில்...அரியலூர் அண்ணாசிலை அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஷாஜகான் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஊர்வலமாகச் சென்று, பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் 69 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
    மாவட்ட துணைத் தலைவர்கள் சிற்றரசு,குணசேகரன்,மாநில துணைத் தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai