Enable Javscript for better performance
சேவை குறைபாடு: ஆசிரியைக்கு இழப்பீடு வழங்க வங்கி கிளைக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    சேவை குறைபாடு: ஆசிரியைக்கு இழப்பீடு வழங்க வங்கி கிளைக்கு உத்தரவு

    By DIN  |   Published on : 23rd March 2017 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேவை குறைபாடு காரணமாக மன உளைச்சலுக்குள்ளான ஆசிரியருக்கு ரூ. 13 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேப்பூர் கிளைக்கு நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வேப்பூரை சேர்ந்தவர் மோகன் மனைவி ஜெயந்தி. இவர், ஆண்டிக்குரும்பலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
    ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவர், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் வேப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளாராம்.
    இந்நிலையில், பிரிமியம் தொகை செலுத்துவதற்காக ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 16,618 மதிப்பிலான காசோலையை கடந்த 20.6.2011-ல் அளித்தார் ஜெயந்தி. அந்த காசோலையை காப்பீட்டு நிறுவனத்தினர் வங்கியில் செலுத்தியபோது, ஜெயந்தியின் கையொப்பத்தில் வித்தியாசம் உள்ளதாக கூறி, வங்கியாளர்கள் அதை திருப்பி அனுப்பிவைட்டனராம். இதையடுத்து, பிரிமியம் தொகையுடன் அபராத தொகையாக ரூ. 135 செலுத்த வேண்டுமென, ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஜெயந்திக்கு நோட்டீஸ் அனுப்பியதாம்.
    ஜெயந்தி, சம்பந்தப்பட்ட வங்கி அலுவலர்களை சந்தித்து விளக்கம் கேட்டதற்கு, வங்கியாளர்கள் தரப்பில் முறையாக பதில் அளிக்க மறுத்ததோடு, அவரை அலைக்கழித்தனராம். இதனால் மன உளைச்சலுக்குள்ளான ஜெயந்தி, வங்கியின் சேவை குறைபாட்டை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 23.1.2012-ல் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயந்தி ஆகியோர் மனுதாரர் ஜெயந்திக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 3 ஆயிரமும் வழங்க வேண்டுமென, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வேப்பூர் கிளைக்கு உத்தரவிட்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai