Enable Javscript for better performance
இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
    அரியலூர் மாவட்டம், இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி மகன் சுரேஷ் (30). இவர், கடந்த 27.11.2013-ல் புதுச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதி பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தினர் விபத்து இழப்பீடு வழங்க கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1.4.2014 ஆம் தேதி சுரேஷ் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் விபத்தில் பாதிக்கப்பட்ட சுரேஷுக்கு ரூ. 1.41 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 23.11.15-ல் உத்தரவிட்டது.
    ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகத்தினர் இழப்பீட்டுத் தொகை வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வட்டியுடன் சேர்த்து ரூ. 1,78,421 வழங்கவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமா பானு உத்தரவிட்டார். இதையடுத்து விழுப்புரம் - பெரம்பலூர் வழித்தடத்தில் சென்ற அரசுப் பேருந்தை, நீதிமன்ற ஊழியர்கள் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்துக்குக் கொண்டு சென்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai