Enable Javscript for better performance
பெரம்பலூரில் நாளை மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (மார்ச் 25) நடைபெற உள்ளது.
    இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தடகளம், நீச்சல், டேக்வாண்டோ, இறகுப்பந்து ஆகியப் போட்டிகள் வயது வரம்பின்றி, இருபாலருக்கும் நடைபெறவுள்ளது.
    தடகளப் போட்டியில் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், ஈட்டி, வட்டு எறிதல் போட்டிகளும், 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ, ப்ரீ ஸ்டைல் 50 மீ, பேக் ஸ்ட்ரோக் 50 மீ, பிரஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீ பட்டர் பிளை, 200 மீ இன்டிவிஜுவல் மிட்லே ஆகிய நீச்சல் போட்டிகள் நடைபெற உள்ளன.
    டேக்வாண்டோ போட்டியில் 14 வயதிற்குள்பட்ட ஆண்களுக்கு 38, 41, 44, 48 ஆகிய எடைக்குள்பட்ட பிரிவிலும், பெண்களுக்கு 35, 38, 41, 44 ஆகிய எடைக்குள்பட்ட பிரிவுகளிலும் போட்டி நடைபெறவுள்ளது.
    வயது வரம்பற்ற பிரிவில் ஆண்களுக்கு 58, 57, 80 மற்றும் 80-க்கு மேற்பட்ட எடைப் பிரிவினருக்கும், பெண்களுக்கு 49, 57, 67 மற்றும் 67க்கு மேற்பட்ட எடைப் பிரிவினருக்கும் போட்டிகள் நடைபெறும். வெல்லும் அணிகளுக்கு பதக்கங்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai