Enable Javscript for better performance
போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகன்.  
    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 2016- 2017 ஆம் ஆண்டுக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவிலான தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
    இதில் குழு விளையாட்டுப் போட்டிகளில் கோ- கோ, கபடி, கையுந்துப்பந்து, வளையப்பந்து, எறிபந்து, இறகுப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளும், தடகள விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ, 200 மீ, 400 மீ ஆகிய ஓட்டப் போட்டிகளும், வட்டெறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 400 மீ. தொடரோட்டம், ஈட்டியெறிதல், குண்டெறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
    14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட இருபாலருக்கான விளையாட்டுப் போட்டிகளில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 10 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளைச் சேர்ந்த 320 மாணவர்களும், 280 மாணவிகளும் பங்கேற்றனர்.
    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகன்.
    இவ்வீரர்கள் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். இதில் வெல்வோர் மாநில போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவர்.
     நிகழ்ச்சியில் தடகளப் பயிற்றுநர் கோகிலா, நீச்சல் பயிற்றுநர் ந. அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai