Enable Javscript for better performance
மறியல்: சத்துணவு ஊழியர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் பாலக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்ட 219 சத்துணவு ஊழியர்களை பெரம்பலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    காலமுறை ஊதியம் வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் காலியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக அறிவித்து, அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 3,500 வழங்க வேண்டும். உணவுச் செலவு மானியமாக உணவு ஒன்றுக்கு ரூ. 5 வீதம் வழங்க வேண்டும். உதவியாளருக்கு சமையலர் பதவி உயர்வும், சமையலர் உதவியாளர்களுக்கும், பள்ளி இறுதி வகுப்பு முடித்தவர்களுக்கும் நிபந்தனையின்றி அமைப்பாளர் பதவி உயர்வும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை முதல்ல மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. செல்லப்பிள்ளை, மாவட்டச் செயலர் டி.எஸ். பெரியசாமி மற்றும் 200 பெண்கள் உள்பட 219 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.
    அரியலூரில்... அரியலூரில் 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 110 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட துணைத் தலைவர்கள் சிற்றரசு, குணசேகரன், மாநில துணைத் தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai