Enable Javscript for better performance
ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை சிபிசிஐடி காவல் துறையினரை கண்டித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவையில், இளைஞர் அபிதாஹிரை சட்டத்திற்கு முரணாக கடத்திச் சென்று, சித்ரவதை செய்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி காவல் துறை அதிகாரிகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டத் தலைவர் முஹமது ரபீக் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலர் இதயத்துல்லா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முஹமது பாரூக் வரவேற்றார். மாவட்டச் செயலர் அப்துல் கனி நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai