Enable Javscript for better performance
டிராபிக் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பியிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    டிராபிக் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பியிடம் புகார்

    By DIN  |   Published on : 25th March 2017 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓம் சக்தி பக்தர்களை தரக்குறைவாக பேசிய டிராபிக் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஓம் சக்தி பக்தர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ராவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
    மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பது: கடந்த 28 ஆம் தேதி மேல்மருவத்தூர் பேனர் அகற்றும் நிகழ்வு என்ற பெயரில் சமூக வலைதளங்களில் டிராபிக் ராமசாமி விடியோ பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ளார். இதில், செவ்வாடை பக்தர்களை தரக்குறைவாக பேசியதோடு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக குருவையும் அவதூறாக பேசியுள்ளார். இந்தப் பதிவு செவ்வாடை பக்தர்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ள விடியோ பதிவுகளை அகற்ற வேண்டும். மேலும், செவ்வாடை பக்தர்களை அவதூறாக பேசியுள்ள டிராபிக் ராமசாமி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
    முன்னதாக, ஆட்சியர் அலுவலக வளாகம் எதிரே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற ஓம் சக்தி பக்தர்கள், டிராபிக் ராமசாமியை கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai