Enable Javscript for better performance
மாணவர்களுக்கு குடிமைப் பயிற்சி முகாம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு 22 ஆம் தேதி தொடங்கிய குடிமைப் பயிற்சி முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    முகாமை, கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தொடக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி துணை முதல்வர் எஸ். மரியதாஸ், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சாந்தி ஆனந்தன் ஆகியோர் குடிமைப் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினர்.
    முகாமையொட்டி, பொம்மனப்பாடி கிராமத்தில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கார்த்திகேயன், செல்வநாயகி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.  தொடர்ந்து நடைபெற்ற எழுத்தறிவு முகாமில், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவு நாளையொட்டி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் க. சாந்தகுமாரி வரவேற்றார். மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆ. ராஜலெட்சுமி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai