Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 27th March 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டம், பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம் மாவட்டத் தலைவர் இ. மரியதாஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
    மாவட்டச் செயலர் சா. இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர்கள் பி. தயாளன், கவுதமன், மாவட்ட இணைச் செயலர்கள் லெட்சுமி, இமயவரம்பன், சேவு ஆகியோர் சங்க வேலைநிறுத்தப் போராட்டம், பேச்சுவார்த்தை ஆகியவற்றை விளக்கி பேசினர். கூட்டத்தில், மாநில நிர்வாகிகளிடம் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளுக்குரிய அரசாணைகளை உடனடியாக வெளியிட வேண்டும். மாவட்டத்தில் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் இரா. அறிவழகன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai