Enable Javscript for better performance
வரி, கட்டணங்களை செலுத்தபெரம்பலூர் நகராட்சி அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள் மற்றும் கட்டணங்களை செலுத்த பொதுமக்களுக்கு நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
    பெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, புதை சாக்கடை கட்டணம் மற்றும் வைப்புத்தொகை ஆகியவற்றை உடனடியாக செலுத்த வேண்டும். மேலும், பொதுமக்களின் நலன் கருதி பழைய மற்றும் புறநகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி அலுவலகங்களில் காலை 9  முதல் மாலை 5 மணி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து வேலைநாள்களிலும் வரி வசூலிக்கப்படுகிறது. எனவே, வரி இனங்கள் மற்றும் கட்டணங்கள் செலுத்த தவறும்பட்சத்தில் சொத்துகளின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, புதை சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் கடை உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai