Enable Javscript for better performance
அரசு மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    அரசு மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

    By DIN  |   Published on : 28th March 2017 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக அரசு மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
    இதுகுறித்து, பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் அளித்த மனு:
    பெரம்பலூர் அருகே உள்ள எசனை பிரதான சாலையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது, அந்த கடையை இடமாற்றம் செய்து, எசனை கிராமத்தின் மையப்பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கடை அமையவுள்ள இடத்தின் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய், கால்நடைகளுக்கான குளம், அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் பிரதான வழித்தடம் மற்றும் விவசாய நிலங்கள், மகளிர் சுய உதவி குழு கட்டடம், வழிபாட்டுத்தலம் ஆகியவை உள்ளன.
    இப்பகுதியில் மதுபானக் கடை அமைந்தால், மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையூறாக இருக்கும். எனவே, கிராமத்தின் மையப்பகுதியில் அமைய உள்ள அரசு மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரியலூரில்:    அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி அருகே குட்டையப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதி மக்கள் ஆட்சியர் எ.சரவணவேல்ராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனு: சிறுகளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட குடிக்காடு பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.
    தற்போது இந்த மதுபானக் கடையை குட்டையப்பட்டி என்ற இடத்துக்கு மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் ஏராளமான கோயில்கள் உள்ளன.
    இப்பகுதியைக் கடந்து தான், பொன்குடிக்காட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு மாணவ,மாணவிகள் சென்று வரவேண்டியுள்ளது. எனவே,மாணவ,மாணவிகளின் நலன் கருதி,டாஸ்மாக் கடையை குட்டையப்பட்டி பகுதிக்கு மாற்றுவதை ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai