Enable Javscript for better performance
இளம்பெண் மர்ம சாவு: ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    இளம்பெண் மர்ம சாவு: ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் விசாரணை

    By DIN  |   Published on : 28th March 2017 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
    பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகள் ஐஸ்வர்யா (20). இவர், குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமிக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில், கடந்த 16 ஆம் தேதி மர்மமாக இறந்து கிடந்தார். ஐஸ்வர்யாவின் தந்தை தங்கவேல் அளித்த புகாரின் பேரில்,  அவரது காதலன் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தீபன், அவரது நண்பன் சின்னசாமி ஆகியோர் மீது பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சின்னசாமியைக் கைது செய்தனர்.
    வெளிநாட்டுக்கு தப்பியோடிய பார்த்தீபனை போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
      இந்நிலையில்,தேசிய ஆதிதிராவிடர் ஆணைய முதுநிலை ஆய்வு அதிகாரிகள் இனியன், லிஸ்டர் ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் மதுரை பாண்டியராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் ஐஸ்வர்யாவின் பெற்றோரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
    மேலும், ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கிய காசோலைக்கான தொகை செலுத்தாததன் காரணம் குறித்து குரும்பலூர் வங்கியாளர்களிடம் கேட்டறிந்தனர்.
    பின்னர், பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்கின் தன்மை குறித்து கேட்டறிந்த அவர்கள், ஆட்சியர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
      தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க மாவட்ட செயலர் என். செல்லதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி இரா. கிட்டு,மாதர்சங்க மாவட்ட செயலர் எ. கலையரசி, சிபிஎம் வட்ட செயலர் எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்ளிட்டோர் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுவை பெரம்பலூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai