Enable Javscript for better performance
பெரம்பலூர், அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க் கூட்டத்தில் முறையே 688 மற்றும், 322 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
    அரியலூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் தலைமை வகித்தார்.
    பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் க. நந்தகுமார் தலைமை வகித்தார்.  
    பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
    மேலும்,பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி,தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்ற வேண்டும் என்று, அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.  
    அரியலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 688 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, துணை ஆட்சியர்கள் பாலாஜி, சீனிவாசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூரில் பொதுமக்களிடம் இருந்து 322 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஸ்ரீதர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா, குடிநீர் பிரச்னை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai