Enable Javscript for better performance
எஸ்எஸ்எல்சி தேர்வு நிறைவு: மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்எஸ்எல்சி தேர்வு நிறைவு: மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்கள்

    By DIN  |   Published on : 29th March 2017 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எஸ்எஸ்எல்சி தேர்வுகள் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தன; இதனால், மாணவர்கள் தேர்வுக்கு பின்னர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
    தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8 ஆம் தேதி தமிழ் முதல் தாள் தேர்வோடு தொடங்கியது. இத்தேர்வுகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன.
    அரியலூர் கல்வி மாவட்டத்தில் 10 மையங்கள், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் 26 மையங்கள் என 36 மையங்களில் 164 பள்ளிகளில் இருந்து 5,473 மாணவர்கள், 5,914 மாணவிகள் என 11,387 பேர் தேர்வு எழுதினர்.
    செவ்வாய்க்கிழமையுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவுக்கு வந்ததையொட்டி, தேர்வு அறைகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகத்தோடு விடைப்பெற்றனர். தேர்வு முடிந்து வெளியில் வந்த பள்ளி மாணவ, மாணவிகள் கூறியதாவது:
    இந்த ஆண்டில் பொதுத்தேர்வை சந்தித்த எங்களுக்கு அனைத்து பாடங்களும் சுலபமாக இருந்ததால், அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
    இந்த கோடை விடுமுறையில் மேல் வகுப்புகளுக்கு எங்களை தயார்படுத்தும் விதமாக கணினி பயிற்சி, தட்டச்சு பயிற்சி, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி பயிற்சி போன்ற பயனுள்ள வகையிலும், கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் சுற்றுலா போன்றவற்றில் பங்கேற்று மகிழ்ச்சியடைவோம் என்றனர். அப்போது சக மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பேனா மையினை ஒருவருக்கு ஒருவர் சட்டையில் அடித்தும், கலர் பவுடர்கள் பூசிக்கொண்டும் உற்சாகத்தோடு தங்கள் வீட்டிற்கு சென்றனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில்.... 9,649 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இத்தேர்வு மையங்களுக்கு காவல் துறையினரின் பாதுகாப்புடன் வினாத்தாள்களை கொண்டுசெல்லும் வகையில், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படையினர், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.செவ்வாய்க்கிழமை தேர்வு எழுதிய பின்னர், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், சிலர் ஒருவர் மீது ஒருவர் பேனா மையால் சட்டைகளின் மீது தெளித்தும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai