Enable Javscript for better performance
இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம், இயற்கை விவசாயிகளுக்கு வேளாண்மை அங்ககச் சான்று பெறுவது குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    செங்குணம் இயற்கை விவசாயி ராமகிருஷ்ணன் பண்ணையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு அம்மா திட்ட துணை இயக்குநர் சேகர் தலைமை வகித்தார். துணை இயக்குநர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.
    இந்த முகாமில், வேளாண் அலுவலர் நல்லேந்திரன், இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள், மண் வளம் பாதுகாத்தல், மண்புழு உரம், ஊட்டமேற்றிய தொழு உரம், பசுந்தழை பயன்படுத்துதல் குறித்து விளக்கம் அளித்தார்.
    வேளாண் பல்கலைக் கழகத்தின் அங்ககச்சான்று துறை வேளாண் அலுவலர் சுரேந்திரன், விண்ணப்பிக்கும் முறை, சான்று பெறும் வழிமுறைகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினார். இதில், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப வல்லுநர் ம. ஏகாம்பரம் உள்பட பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் 85 விவசாயிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai