Enable Javscript for better performance
இலவச தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    நவீன மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்கள் பெறுவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ள பெண்கள் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நலத் துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதரவற்றவர், கணவரால் கைவிடப்பட்டவர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.  இத்திட்டத்தின் மூலம் தையல் இயந்திரங்கள் பெற விரும்புவோர் ஆதரவற்றவர், கணவரால் கைவிடப்பட்டவர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று, குடும்ப வருமான சான்றிதழ் (ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல்), வயது சான்றிதழ் (20 முதல் 40 வயதுக்குள்பட்டவர் பள்ளி கல்விச் சான்று அளிக்க வேண்டும்),
    வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சாதி சான்று, தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் - 2 உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஏப். 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
    மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலரை 8056555813 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.   

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai