Enable Javscript for better performance
இளம் பெண் மர்மச் சாவு:சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    இளம் பெண் மர்மச் சாவு:சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 30th March 2017 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கை, சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி குழு வலியுறுத்தியுள்ளது.
    பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகள் ஐஸ்வர்யா (20). இவர், குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமிக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கடந்த 16ஆம் தேதி இறந்து கிடந்தார்.
    ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் அவரது காதலன் நாவலூர் கிராமத்தை சேர்ந்த பார்த்தீபன், அவரது நண்பர் சின்னசாமி ஆகியோர் மீது பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சின்னசாமியை கைது செய்தனர்.
    வெளிநாட்டுக்கு தப்பியோடிய பார்த்தீபனை போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
    இதுதொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணைய முதுநிலை ஆய்வு அதிகாரிகள் இனியன், லிஸ்டர் ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் மதுரை பாண்டியராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் ஐஸ்வர்யாவின் பெற்றோரை நேரில் சந்தித்து 27ஆம் தேதி விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உண்மை கண்டறியும் குழுத் தலைவர் வழக்குரைஞர் ஆர். கிருஷ்ணன் தலைமையில், மாநில துணைத் தலைவர் எம். சின்னதுரை, வழக்குரைஞர்கள் வி. ரங்கராஜன், ஆ. இளையராஜா ஆகியோர், ஐஸ்வர்யா இறந்து கிடந்த இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
    விசாரணை அறிக்கையை பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை வெளியிட்டனர்.
    அந்த அறிக்கையில், ஐஸ்வர்யா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என இந்தக் குழு உறுதியாக நம்புகிறது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். ஐஸ்வர்யா குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
    தீருதவி தொகை முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஸ்டாலின், குணசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில நிர்வாகி ப. காமராசு உள்பட பலர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai