Enable Javscript for better performance
ஏப். 25-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப். 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஓய்வூதிய இயக்குநர் எஸ். நஸிர் ஹூஸேன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்.
    25ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த குறைதீர்க்கும் 2 மனுக்களின் பிரதிகளுடன் ஏப். 10ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அல்லது அஞ்சல் வழியாகவோ அளிக்கலாம். மேலும், ஏப். 25 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai