Enable Javscript for better performance
கீழப்புலியூரில் இன்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கீழப்புலியூரில் இன்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு முகாம்

    By DIN  |   Published on : 30th March 2017 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகேயுள்ள கீழப்புலியூர் கிராமத்தில், தமிழ்நாடு கட்டுமானம் அமைப்பு சாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர் நலவாரியங்களில், தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (மார்ச் 30) நடைபெறுகிறது.
    இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர் நலவாரியங்களில் அதிகப்படியான தொழிலாளர்களை பதிவு செய்யவும், வாரியங்களின் நலத்திட்டங்களை தொழிலாளர்கள் பயனடையும் வகையிலும், பெரம்பலூர் அருகேயுள்ள கீழப்புலியூர் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
    இந்த முகாமில், உறுப்பினராக சேர விரும்புவோர் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வயது சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் புகைப்பட அடையாள அட்டை, அரசு அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அலவு புகைப்படங்கள் 3 ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai