Enable Javscript for better performance
தம்பதியை ஏமாற்றி 6 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் தம்பதியை ஏமாற்றி 6 பவுன் நகையை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்ற முதியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தை சேர்ந்த ஆறுமுகமும் (48), இவரது மனைவி சித்ராவும் (30) செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்தார்களாம். அப்போது, சுமார் 65 வயதுள்ள முதியவர் அவர்களது வீட்டிற்கு சென்று குடும்ப பிரச்னைகளை தீர்க்க சிறப்பு பூஜை செய்ய வேண்டுமென தெரிவித்தாராம்.
    இதை நம்பிய ஆறுமுகம், பூஜைக்குத் தேவையான பொருள்களை வாங்கி கொடுத்தாராம். பூஜையில் ஈடுபட்ட அந்த முதியவர் சித்ரா கழுத்தில் அணிந்திருந்த நகையை கழட்டி பூஜையில் வைக்குமாறு கூறியுள்ளார்.
    பின்னர், பூஜையை முடித்து முதியவர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் கழட்டி வைத்த நகையை தேடியுள்ளனர். பின்னர், அந்த நகையை முதியவர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குன்னம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai