Enable Javscript for better performance
பழுதடைந்த நியாயவிலைக் கடை கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பழுதடைந்த நியாயவிலைக் கடை கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 30th March 2017 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகே பழுதடைந்துள்ள நியாயவிலை கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 3 நியாய விலைக்கடைகள் உள்ளன. இதில், 2, 6, 7 ஆகிய வார்டுகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 3- வது கடையின் மூலம், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், எந்த நேரத்திலும் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்துடன் உள்ளார் அங்கு பணிபுரியும் விற்பனையாளர்.  
    கட்டடத்தை முறையாக பராமரிப்பு செய்யாததால், ஒவ்வொரு ஆண்டும் பழுதடைந்து வருகிறது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையிலும், பராமரிக்கப்படாததால் அவை பலமிழந்து வருகின்றன. எனவே, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன், நியாயவிலைக் கடை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது கட்டடத்தை புதுப்பிக்கும் வரையிலும் வேறு இடத்திற்கு கடையை இடமாற்றம் செய்ய கூட்டுறவுத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai