Enable Javscript for better performance
பெரம்பலூரில் ஏப். 7-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் ஏப். 7-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 30th March 2017 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.
    சிலிண்டர்கள் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு தொடர்பான புகார்களை பெற்று, உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குள்பட்டு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
    இக்கூட்டத்தில், எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எரிவாயு நுகர்வோர், எரிவாயு சம்பந்தமான குறைகள் இருந்தால் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.
    மேலும், எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகளை களைவது தொடர்பான ஆலோசனைகளும் அளிக்கலாம்' என்று ஆட்சியர் க. நந்தக்குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai