மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்
By DIN | Published on : 30th March 2017 06:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகம் சார்பில், மாவட்ட அளவிலான கலை விழா துறைமங்கலம் சமுதாயக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், கிராமிய பாடல், நடனம், ஓரங்க நாடகம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, சமூக ஆர்வலர் பொன். ஆனந்தராசு தலைமை வகித்தார். துறைமங்கலம் சமூக ஆர்வலர் வரதராஜன், பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர் பக்கிரிசாமி, தேவார ஆசிரியர் நடராசன் ஆகியோர் பேசினர்.
நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். இதில், இளைஞர், மகளிர் மன்ற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.