Enable Javscript for better performance
மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை

    By DIN  |   Published on : 30th March 2017 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுபவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி.  
    கடும் வறட்சியால் பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கொள்ளிடம் கூட்டு குடிநீர், கிணறு மற்றும் போர்வெல் மூலம் தண்ணீர் பெற்று, நீர்தேக்க தோட்டிகளில் ஏற்றி குழாய் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    இது, பொதுமக்களுக்கு போதுமான அளவில் கிடைக்கவில்லை. இருப்பினும், வாகனங்கள் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பொதுமக்கள் மின் மோட்டரை பொருத்தி, தண்ணீர் உறிஞ்சும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அனைவருக்கும் குடிநீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
    இதையடுத்து, ஒன்றிய அலுவலர்கள் கொண்ட தனிப்படையினர் கிராம பகுதிகளில் வீடு, வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, எசனை கிராமத்தில் 39 மின் மோட்டார்களும், வேலூர் கிராமத்தில் 15 மின் மோட்டார்களும் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன.
    பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, மின் மோட்டர் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பை துண்டிப்பதோடு, மின் மோட்டாரை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai