Enable Javscript for better performance
"ஏப். 2, 30-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்'- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 2 30-ம் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.

    பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற, போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:   இளம்பிள்ளைவாத நோயை முழுமையாக ஒழிக்க, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து ஏப். 2,  30 ஆகிய தேதிகளில் புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளி வளாகங்கள், அங்கன்வாடிகள் என, மொத்தம் 383 மையங்களில் முகாம் நடைபெற உள்ளது.  

    இந்த மையங்களில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என மொத்தம் 1,528 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

    பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதிற்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும், ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் ஏப். 2 காலை 7 முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து புகட்டிக் கொண்டு, இளம்பிள்ளை வாதநோயிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

    இணை இயக்குநர் (பொ) சசிகலா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai