Enable Javscript for better performance
காவல் கண்காணிப்பாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையம் எதிரே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆரப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் எம். கருணாநிதி, மாதர் சங்க மாவட்டச் செயலர் எ. கலையரசி ஆகியோர் தலைமை வகித்தனர்.
    தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை செயலர் எம். சின்னதுரை, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி எஸ். கீதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
    ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகள் ஐஸ்வர்யா (20) மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கை அலட்சியமாகக் கையாளும் மாவட்டக் காவல் கண்கானிப்பாளர் சோனல்சந்த்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கி, தமிழக அரசு சார்பில் 3 ஏக்கர் நிலம், வீடு வழங்க வேண்டும். பெரம்பலூர் போலீஸார் விசாரித்தால் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலர் ஆர். மணிவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் என். செல்லதுரை, சிஐடியு மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி, சிபிஎம் வட்டச் செயலர் எஸ்.பி.டி. ராஜாங்கம், வழக்குரைஞர்கள் ப. காமராசு, இரா. ஸ்டாலின், எ. கணேசன், பி. கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai