ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: எழுத்துத் தேர்வுக்கு 734 பேர் தகுதி

பெரம்பலூரில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற 12,534 இளைஞர்களில், 734 பேர் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். 

பெரம்பலூரில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற 12,534 இளைஞர்களில், 734 பேர் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். 
பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்ட இளைஞர்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், பெரம்பலூரில் நடைபெற்றது. 
கடந்த 10 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (ஏப். 17) வரை நடைபெற்ற முகாமில் 12,534 பேர் பங்கேற்றனர். இவர்களில் பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பிறகு, 734 பேர் எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான எழுத்துத்தேர்வு திருச்சியில் உள்ள ராணுவ அலுவலகத்தில் விரைவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 24 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆள் சேர்ப்பு முகாம், செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com