பெரம்பலூரில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் ஏ. முஹம்மது ரபீக் தலைமை வகித்தார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் எம். அபுபக்கர் சித்திக், மக்கள் உரிமை பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் எஸ். அசன் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கட்சியின் மாநில பேச்சாளர் கே.எஸ். சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞரணி மாநில இணைச் செயலர் பேரா. முருகையன், நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலர் பா. அருள், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலர் ப. காமராசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  
ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற சட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும். நீதிக்காக தேசத்தின் அபிமானிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக், செய்தி தொடர்பாளர் எம். அகமது இக்பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
மாவட்ட துணைத் தலைவர் எம். முஹம்மது பாருக் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலர் ஏ. அப்துல் கனி நன்றி கூறினார். 
இதேபோல, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எம். சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் மாவட்டச் செயலர் கே.ஏ. மீரான் மொய்தீன், தமுமுக மாவட்டச் செயலர் ஏ. குதரத்துல்லா, மாவட்ட பொருளாளர் முஹமது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், திமுக மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரியலூர்: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே தமுமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைப்பின் மாவட்டத் தலைவர் கமாலுதீன் தலைமை வகித்தார். மாவட்ட தொண்டரணி செயலர் அப்துல் ராஷித், மாவட்டச் செயலர் ஷேக் இப்ராஹிம், மாவட்ட செயலர்கள் மனிதநேய மக்கள் கட்சி ஷாகுல் ஹமீது, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ரா. உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரா. மணிவேல், திராவிடர் கழக மண்டலத் தலைவர் சி. காமராஜ், விடுதலைச் சிறுத்தைகள்  மாவட்ட துணை செயலர்  ரா.கதிர்வளவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com