பெரம்பலூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி

பெரம்பலூரில்  உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில்  உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம் சார்பில் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பேரணியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தொடக்கி வைத்தார்.
சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு,  பழைய பேருந்து நிலையம் வழியாக சென்ற பேரணி பெரம்பலூர் வட்டாட்சியர் அவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கற்ற மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டு, துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள் வழங்கிச் சென்றனர். 
முன்னதாக, அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், நம்பிக்கை மைய ஆலோசகர்கள் ஆகியோர் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்றனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டம் சார்பில் அமைப்பட்டிருந்த தன்னிலை அறிதல் தொடர்பான பரிசோதனை மையத்தை திறந்து வைத்து, எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டார் ஆட்சியர் சாந்தா. 
நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, கோட்டாட்சியர் விசுவநாதன், இணை இயக்குநர் திருமால் மற்றும் தனலட்சுமி சீனிவாசன், ரோவர், கிறிஸ்டியன் செவிலியர் பயிற்சிப் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com