Enable Javscript for better performance
அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு மறியல்- Dinamani

சுடச்சுட

    

    அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு மறியல்

    By DIN  |   Published on : 09th February 2018 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூரில் அடிப்படை வசதி ஏற்படுத்தித் தராத நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
    பெரம்பலூர் ஆட்சியரக சாலையில் உள்ள அபிராமபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இப்பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.
    மின் விளக்கு அமைத்துத் தர வேண்டும். புதை சாக்கடை திட்டத்துக்கு இணைப்பு வேண்டும் எனக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
    இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நீதிமன்ற ஊழியரான சபாபதி மனைவி கவிதா (40), புதன்கிழமை இரவு அவரது வீட்டுக்கு நடந்து சென்றபோது, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அவரின் ஒரு பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார்.
    இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் மின் விளக்கு வசதி இல்லாததால் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக கூறியும், அடிப்படை வசதி கோரியும், அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த நகராட்சி ஆணையர் (பொ) பிரகாஷ் தலைமையிலான அலுவலர்கள் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர். அப்போது, நகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட பொதுமக்கள் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி முழக்கமிட்டனர்.
    தொடர்ந்து, போலீஸார், வருவாய்த் துறையினர் மூலம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai