Enable Javscript for better performance
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்கு களப் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்கு, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் கற்பித்தல் கள பயணம் சென்றனர்.
    தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ், கற்பித்தல் களப்பயணம் நிகழ்ச்சிக்காக சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தலா 20 பேர் வீதம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்கு சென்று பார்வையிட்டனர்.
    அப்போது, மதுரகாளியம்மனின் சிறப்பு, சக்தி, பலன்கள் மற்றும் தங்க ரதம் ஆகியவை குறித்து ஆசிரியர் மூலம் விளக்கப்பட்டது. மேலும், மதுரகாளியம்மன் கோயிலில் திங்கள், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பெளர்ணமி, புத்தாண்டு ஆகிய நாள்களில் மட்டுமே நடை திறப்பு, கோயிலின் குளம் உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai