Enable Javscript for better performance
தடகளப் போட்டியில் பங்கேற்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா கூறியது:
    2017- 2018 ஆம் ஆண்டுக்கு பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வு திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் பிப். 13 காலை 9 மணி முதல் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.
    இதில், 6, 7, 8 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும்.முதல் 3 இடங்களை பெறும் வீரர்,வீராங்கனைகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 1.1.2005- இல் அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாகவும், 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 1.1.2004 -இல் அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாகவும், 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 1.1.2003- இல் அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
    முதல் 2 இடத்தில் வெற்றி பெற்றவர்கள் மண்டல போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் போட்டி நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு விளையாட்டு மைதானத்துக்கு வர வேண்டும். மாணவ, மாணவிகள் பயிலும் வகுப்பு வாரியாக தனித்தனியே போட்டி நடத்தப்படும். மேலும், ஒரு மாணவ, மாணவி தடகள விளையாட்டில் 3 பிரிவுகளில் கலந்து கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai