Enable Javscript for better performance
துறைமங்கலத்தில் குழந்தை உரிமைகள், பாதுகாப்புத் திறன் வளர்ப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    துறைமங்கலத்தில் குழந்தை உரிமைகள், பாதுகாப்புத் திறன் வளர்ப்பு பயிற்சி

    By DIN  |   Published on : 09th February 2018 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் வட்டாரத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்புப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
    இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நடராஜன் பேசியது:
    குழந்தைத் திருமணம் செய்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தே தண்டனையாக பெற்றுத்தரப்படும்.
    குழந்தைத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் 3
    மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் பெற்றுத் தரப்படும். மேலும், குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினால் அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றார் அவர். இதில், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லீமாபீட்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai